என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற்றோர் கண்டிப்பு"
ஜோலார்பேட்டை:
பெங்களூர் மாநிலம் மனோரஞ்சிதபாலையா பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மகள் சித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சித்ரா தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் ரெயில் ஏறி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.
ரெயிலில் இருந்து இறங்கிய அவர் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட ரெயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுமி தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சிறுமியை வேலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஓப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சிறுமியை அவர்களிடம் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் தினேஷ்குமார் (வயது 14). இவர் உமையாள்புரத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் தினேஷ்குமார் குறைவான மதிப்பெண் எடுத்தார். இதனால் அவரை பெற்றோர் ஏன் குறைவான மதிப்பெண் எடுத்தாய்? என திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் இருந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகள் பெத்து மணி (வயது 20).
இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணன். இவருடன் பெத்துமாரி அடிக்கடி பேசியுள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கண்ணன் குடும்பத்தினர் மதுரைக்கு மாறி விட்டனர். அதன் பின்னர் பெத்துமாரி செல்போன் மூலம் கண்ணனிடம் பேசி வந்தாராம்.
இந்த நிலையில் மாரிக்கனியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவரது மனைவி மீனாட்சியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அப்போது தனியாக வீட்டில் இருந்த பெத்துமாரி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து பாண்டியன் நகர் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெத்துமாரியை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சஞ்சய் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சய்யை அவரது பெற்றோர் நன்கு படிக்குமாறு கூறி வந்தனர். இதனால் சஞ்சய் அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் சஞ்சய் வெளியே சென்று இருந்தார். அப்போது தனது நண்பர்களிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறினார். அவரை சக நண்பர்கள் சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பக்கத்தில் உள்ள முந்திரி மரம் ஒன்றில் சஞ்சய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சஞ்சய் பலியானது பற்றி தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் ஏராளமானோர் இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். சஞ்சய்யின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
சஞ்சய் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கம் அருகே பெருங்களூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சிவா (வயது 15). இவன் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
சம்பவத்தன்று சிவா வீட்டில் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை ரோட்டில் வீசினான். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு சைக்கிளில் வீட்டில் இருந்து சென்ற சிவா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் இல்லை.
இதையடுத்து சிவா மாயமானது குறித்து அவனது பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிவாவை தேடி வருகிறார்கள்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் ரேஷ்மா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ரேஷ்மா குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தார். எனவே பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரேஷ்மா எலி மருந்து குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரேஷ்மா பரிதாபமாக இறந்தார்.
திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த பிரம்மதேசம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த 17 வயது மாணவன், வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார். இந்த மாணவன் சரிவர படிக்காததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து, கோபித்துக் கொண்டு மாணவன் வீட்டில் இருந்து கடந்த 27-ந் தேதி வெளியேறினார். எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை.
இதுபற்றி, பிரம்மதேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் குமரேசன் (வயது 26). இவர் போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
எனவே பெற்றோர் இவரை கண்டித்தனர். மனமுடைந்த குமரேசன் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்தார். அதில் விஷத்தை கலந்து குடித்து குமரேசன் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்